புத்தாண்டே வருக வருக

புத்தாண்டே வருக!! வருக!!💥💥 💐💐

ஏனோ தெரியவில்லை உன்னை புண்ணகையுடன் வரவேற்க மனம் இல்லை.
ஏதோ ஒரு பதற்றத்துடன் உன்னை வரவேற்கிறேன்.
பணம்,காசு,
சாதி,மதம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு நாங்கள் அனைவரும் அண்ணன் தம்பிகளாக
சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து வருகிறோம்
அதற்கு பங்கம் விளைவிக்காமல் நீ நல்லதொரு மதநல்லிணக்கத்துடன் வருவாயா? புத்தாண்டே வருக! வருக!
படாது பாடுபட்டு வாழ்க்கை நகர்த்துகிறோம்
பணம் என்னும் வாழ்வாதாரம் எங்களிடம் பயணிக்க மறுக்கிறது.
அதிக ஆசை இல்லை
அளவான பணத்துடன் எங்களை காண வருவாயா?
புத்தாண்டே வருக! வருக!
பச்சிளம் குழந்தைக்கு தன் உடலால் பால் கூட கொடுக்க இயலாத வறுமையில் உள்ள அந்த ஏழை தாய்க்கு அவள் அன்றாடம் வயிறு குளிர தன் குழந்தைக்கு பால் வாங்க காசு ஏற்பாடு செய்வாயா?
புத்தாண்டே வருக! வருக!
மனித மலத்தை மனிதனே அல்லும் அவலம் இன்றும் உள்ளது.
அதை முற்றிலும் இயந்திரம் மயமாக்க உன்னால் முடியுமா?
புத்தாண்டே வருக! வருக!
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
கால் வயிறு கஞ்சிக்காக
என் சகோதரிகள் பாலியல் தொழிலில் சிக்கி கொண்டனர். அவர்களை எல்லாம் மீட்டு, அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை தருவாயா!
புத்தாண்டே வருக! வருக!
முதியோர் இல்லங்களை முற்றிலும் மூடிவிட்டு
அவர்களை தன் வீட்டிலேயே அரவனைக்கும் மனதை அவர்களின் பிள்ளைகளுக்கு தருவாயா? புத்தாண்டே வருக! வருக!
இதற்கெல்லாம் முத்தாய்பாய் ஒரு ஆசை.
ஒரே ஒரு ஆசை.
வரும் நம்மாநில தேர்தலில் , இளைஞர்கள் வழி நடத்தி,
தேர்தலில் வெற்றி கண்டு
ஒரு தமிழ் விவசாயி
முதல் அமைச்சர் ஆசனத்தில் அமர்ந்து தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
அப்படி செய்வாயா. புத்தாண்டே வருக, வருக.
அனைவர் வாழ்விலும்
அமைதியும், சமாதானமும், மகிழ்ச்சியும் தர வருவாயா?
புத்தாண்டே வருக! வருக!💐💐
புத்தாண்டு வாழ்த்துக்கள் .
- பாலு.

எழுதியவர் : பாலு (31-Dec-19, 5:01 pm)
சேர்த்தது : balu
பார்வை : 270

மேலே