புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2020

இன்னும் ஓராண்டு காலம்
நம்முடனே பயணம் செய்யும்
இந்த புத்தாண்டை நாமும்
ஆரவாரத்துடன் வரவேற்போம்

நல்லதே நடக்கும், தீங்கெதும் வேண்டாம்
என நம் மனம் நினைப்பதை நிஜமாக்க
இப்புத்தாண்டை நாமும்
ஆரவாரத்துடன் வரவேற்போம்

அவரவர் மனதிலே ஆயிரம் எண்ணங்கள்
அனைத்தும் அப்படியே அசலாக நடந்திட
இப்புத்தாண்டை நாமும்
ஆரவாரத்துடன் வரவேற்போம்

கோபதாபங்கள் யாவையும் புறம் தள்ளி
அமைதி ஆனந்தத்தை அன்போடு ஏற்று
அழகான வாழ்வையே அனைவரும் வாழ்ந்திட
இப்புத்தாண்டை நாமும்
ஆரவாரத்துடன் வரவேற்போம்

நட்பும் உறவும் உன்னதமாய் தோள் கொடுக்க
அதன் உண்மையான நேசத்தை அப்படியே உள்வாங்கி
அசத்தலான வாழ்வுதனை இப்புவிதனிலே வாழ்ந்திடவே
இப்புத்தாண்டை நாமும்
ஆரவாரத்துடன் வரவேற்போம்

என்றே நான் கவிபாடி என் இனிய
புத்தாண்டு வாழ்த்தினையே எல்லோருக்கும்
சொல்லுகின்றேன்

வாழ்க நலமுடன்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (1-Jan-20, 1:36 pm)
பார்வை : 53

மேலே