ஹாப்பி நியூ இயர்
பிறந்தது நல் வருடம்
வாழ்த்துவோம் வளம் சேர
வரவிருக்கும் நன்மைகள்
யாவும் தொடர்ந்து வழங்கிட
வாழ்த்தித்தான் வணங்குவோம் ..
இப்புத்தாண்டின் நல்வரவால்
பகைமை ஒழிந்து பலம் சேர்ந்து
மக்கள் யாம் ஒன்றுபட்டு வாழ்ந்திட
வாழ்த்துவோம் வருடமிதை.
பிறக்கும் வருடம் எல்லாம்
பொன் கொழிக்க , போர் அறுக்க
வாழ்வளிக்க, வளம் செழிக்க
வேண்டித்தான் பெறுகின்றோம்
வருடம்தான் வரமாக அமைய .
புத்தம் புது ஆண்டை போற்றுகிறோம்.
happy new year