ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வானிலிருந்து வந்து
உழவனுக்கு உதவியது
வயல் விளைந்திட !

கண்ணுக்குத் தெரிவதில்லை
தந்தது இதம்
உடலுக்கும் உள்ளத்திற்கும் !

கதிரவன் மறைந்து
நிலவின் வருகை
இன்பம் இணைகளுக்கு !

ஓரிடத்திலேயே நில்லாமல்
வேறிடம் செல்கையில்
மனதிற்கு மகிழ்ச்சி !

இசைக்கத் தெரியாவிட்டாலும்
ரசிப்பதிலும்
உண்டு சுவை !

ஆக்கமும் அழிவும்
உள்ளது பயன்படுத்தலில்
நெருப்பு !

மலர்கள் மீது
சந்திரன் அனுப்பிய
காதல் கடிதங்கள் !

.உருவமற்றது
ஓங்கி அடித்தால்
உருக்குலைத்து விடும் !

நதிகளின் கூட்டணி
மீன்களின் வாழ்விடம்
மீனவர்களின் வாழ்வாதாரம் !

வானிலை அறிக்கையில்
வாசிக்கிக்காத போதும்
வந்து வீழ்த்துகின்றது !

சில நேரம் துன்பம்
சில நேரம் இன்பம்
யாருமற்ற நேரம் !

முக்காலமும் நிகழும்
முடிவற்ற நிகழ்வு
காதலர்களுக்கு !

பிரிந்து பின் சேர்ந்தால்
பரவசம் தன்வசம்
இணையர்களுக்கு !

மாதா பிதா குரு
மூன்றும் ஒரே வடிவில்
நண்பன் !

விலகிவிட்டபோதும்
வெறுக்கவில்லை மனம்
என்னவளை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (5-Jan-20, 9:20 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 202

மேலே