சிலிர்ப்பை உருவாக்கி

பன்னிரு உயிரையும் பதினெட்டு மெய்யையும்
முதலாய்க் கொண்ட மொழியே
பரிதியின் வெடிப்பினால் ஆன கோள்களுள்
ஆதியில் தோன்றிய மொழியே
வல்லினம் மெல்லினம் இடையினம் என்ற வழியில்
நளினமாய் ஆளும் மொழியே
இயற்கையான ஒலி வடிவால் எல்லா
எழுத்துக்களையும் இயக்கும் உயிர் மொழியே
சிந்தனையை வளப்படுத்தி சிலிர்ப்பை உருவாக்கி
சிறப்பாக ஆளும் மொழியே
ஓர் எழுத்தில் பல பொருளை பறைச்சாற்றியவாறே
ஓங்கி உலகாளும் மொழியே
மாத்திரை அளவுகளால் மங்காத ஒலி அளவை
மாறாமல் காக்கும் மொழியே
இக்காலத்தில் உலகாளும் எத்தேச மொழியாயின்
அவைகளுக்கு தாய்த் தமிழே.
----- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (13-Jan-20, 10:22 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 55

சிறந்த கவிதைகள்

மேலே