முத்தமிட்டாள்

மனம் விரும்பும் - காதலியே

மழை வந்தும் - நீ

ஏனடி கோலமிட்டாய் என்றேன் -



மழை வந்தாலும் - என்

மனதிற்கினியவன் - என்னைக் காண

வருவான் என்றே

வாசலில் கோலமிட்டேன் என்றாள் -



அன்று அவளின் விரல்களால்

கோலத்திற்கு வண்ணம்கொண்டு முத்தமிட்டாள் -

அவளின் விழிகளால் - என்

உள்ளத்திற்கே முத்தமிட்டாள்.....!!!



- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : - கவிஞர் நளினி விநாயகமூர்த (13-Jan-20, 1:05 pm)
Tanglish : muththamittaal
பார்வை : 186

மேலே