இனியெவர் செய்வாரோ கட்டளைக்கலிப்பா
இனியெவர் செய்வாரோ
கட்டளைக்கலிப்பா
இனிக்கும் தமிழ்மொழி யில்கம் பனுமே இயற்றினாராம்
பனிக்கு இராமாய ணத்தை பலரும் புகழ்சிலம்பை
பணிந்து இயற்றினன் பார்வேந் திளங்கோ மரபேத்திட
இனியும் எவரிது போல்செய் வரோசொல் லுமுலகோரே