கிராமத்து அழகி அவள்

அதோ போகின்றாளே ஏரிக்கரை மேலே
அவள் கிராமத்து கன்னிப் பெண்
ஒளி மயமான அவள் முகத்தில்
மஞ்சள் பூச்சு தங்கம்போல் மின்னுது
துள்ளும் கயல் கண்ணினாள் அவள்
பட்டணத்து அழகு 'மாடல்' யாரையும்
கண்டதில்லை அவர்கள் 'கேட் வாக்'
அறிந்தவள் அல்லள், ஆனால் அவள்
நடை அழகு இயற்கை தந்தது
அன்னத்தின் நடையையும் மிஞ்சியது
அதைக் கண்டு 'கேட் வாக்' மாதர்
தங்கள் நடையை மறந்துவிடுவார்
தங்க மகள் இவள் நடையைப் பயில
முன்வருவரோ .....
இதோ இப்போது சிரிக்கிறாள் அவள்
அதில் மலர் வண்டின் ரீங்காரம் கேட்கிறது
மெல்ல மெல்ல மெதுவாய் இன்பமாய்
அதிர்வு ஏதும் இல்லாது
மலர்ந்த அதரங்கள் செந்தாமரையோ
என்பது போல் இருக்க அதில் பற்கள்
முத்துக்களோ என காண்கின்றேன்
இதோ துள்ளித் துள்ளி ஓடுகிறாள்
அவள் கோல மயில் போல
வெற்றிலைக்கொடி அன்ன சிற்றிடை ஆட
இயற்கை தந்த வடிவழகி இவள்
என் மனது கொள்ளைக்கொள்ள

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Jan-20, 7:56 pm)
பார்வை : 352

மேலே