பழைய டைரி குறிப்புகள்

பழைய டைரி குறிப்புகள்
**********************

(ஒரு ஊர்,ஒரு வீடு, ஒரு மனிதன்...அவனது பழைய பஞ்சாங்கத்தை படிக்க வகையில்லது எழுதுகிறான்.காலத்தினுள் மறந்துபோன மனிதர்களையும் அவர்களால் ஏற்பட்ட நினைவுகளையும் கடிதமாய் எழுதுகிறான்.இது அந்த மனிதனின் கண்டுகொள்ளப்படாத தூசு படிந்த பழைய டைரி குறிப்புகள் எனலாம்.....)



அன்புள்ள மூர்த்தி,

நலம்.அவ்வண்ணமே நீயும் இருப்பாய் என எண்ணுகிறேன்.14 வருட இடைவெளிக்கு பிறகு உனக்கு நான் எழுதும் முதல் கடிதம் இது. வீட்டில் அம்மா எப்படி இருக்கிறார்?புதிய வேலையும், வெளிநாடு பயணமும் வசதியாக இருக்கிறதா?அம்முக்குட்டியை பள்ளிக்கூடத்தில் சேர்த்தாயிற்றா?மூர்த்தி ஏனோ உன்னோடு நிறைய பேசவேண்டும் என்று தோன்றுகிறது இன்று.அன்று நாம் இருந்த விடுதி அறையின் ஒவ்வொரு தூண்களும் கேட்டிருக்கும் இரவெல்லாம் நாம் பேசிய பழங்கதைகளையும்,அரசியலையும்,விவாதங்களையும்!இன்றோ எனது இந்த அறையின் சுவர்கள் என்னை பரிதாபமாக பார்ப்பது போல் ஒரு பிம்பம். நீயும் சென்ற பிறகு விழா கோலம் இழந்து மௌனித்த மாயாணமாகிவிட்டது வீடும்,என் மனதும்.வாழ்க்கையின் சுழற்சியில் எல்லோறோம் எங்கோ அடித்து செல்லப்பட்டோம்.உனக்கு நினைவிருக்கிறதா மூர்த்தி.பொறாமை,கோவம் என்று யாவும் அறியாது எதையும் எதிர்பார்க்காது ஊரில் சுதந்திரமாக சுற்றி திரிந்தோமே!கோயில் திருவிழாக்கள்,கூடிய சொந்தங்கள்,எப்போதும் உடன் இருக்கும் என. நம்பிய நட்புகள், ஒன்றாய் பயணப்பட்டு,லேசாய் சண்டையிட்டு,கிடைப்பதை உண்டு,இரவெல்லாம் கதை பேசி, பாசமேனனும் சொர்கத்தில் சிலிர்த்து, பணம் காசு அறியாது மகிழ்ச்சியோடு மட்டுமே இருந்தோமே.நினைவுண்டா?மறக்கமுடியாததும் அழிக்க முடியாததும் நினைவுகள் மட்டும் தான்.ஆனால் இந்த 10 ஆண்டு சென்னை வாழ்வு எனக்கு சலிப்பை தரவில்லை.எவ்வளவு அழகான நகரம் இது.ஏதுமின்றி வந்தவனுக்கு எல்லாம் தந்து வாழவைக்கிறது.சிலபெருக்கு இந்த நகரம் எல்லாவுமாக இருப்பதை பார்க்கிறேன்.இந்த நகரம் உறங்குவதே இல்லை.எப்போதும் கீச்சரைகள் ஆனாலும் அதில் உள்ள மெல்லிய மௌனத்தை என்னால் மட்டும் கண்டுகொள்ள முடிகிறது. இப்போதெல்லாம் மனம் சரி இல்லாத பொழுதுகளில் நான் செல்லும் இடம் கடல் தான்.பல மணி நேரம் வெறுமனே அந்த கடல் அலைகளையே பார்த்துக்கொண்டிருப்பேன்.என்னுடைய எண்ணங்களும் அதிலேயே கரைய தொடங்கும்.என்னைப்போலவே இந்த பெருங்கடலும் எப்போதும் தனிமையாகவே இருக்கிறதே என்பதை எண்ணி ஒரு பைத்தியகரனை போல் சிரித்துக்கொண்டிருப்பேன்.28 வருட வாழ்க்கை எனக்கு இன்ன இன்ன விசயங்கள் கற்று கொடுத்தது இன்ன இன்னவற்றை புரியவைத்தது.அதில் ஒன்று நிறம் மாறும் போட்டியில் பச்சோந்திகளை ஜெய்த்துவிடுகிறார்கள் மனிதர்கள். எப்படி பட்ட மனிதர்கள் இவர்கள்.புகழ் என்னும் போதை உச்சிக்கு ஏறும் போது இவர்கள் எனயவற்றை மறந்துவிடுகிறார்கள் அல்லது அற்ப புகழுக்காக எந்த நிலைக்கும் செல்கிறார்கள்.ஏன் இந்த உலகம் இப்படி மாறிப்போனது.அவர்கள் காட்டிய பாசம் எங்கே,அள்ள அள்ள குறையாத அன்பின் பிறப்பிடங்கள் என்று எண்ணிய ஏன் ஒரு கட்டத்தில் காணாமல் போய்க்கீரர்கள்?எது அவர்களை மாற்றியது?உண்மையில் வேலை பழுதானா இல்லை ஆசைகளா இல்லை உறவின் மீது ஏற்பட்ட சலிப்பா?வாழ்க்கையின் ஒரு பகுதியில் திரும்பி பார்க்கின்ற போது யாரும் இல்லாத வெற்றிடம் இருப்பதாய் மனதுக்குள் ஒரு சலசலப்பு.அவர்கள் போகட்டும்.நான் அவர்களோடு தர்க்கம் செய்ய மாட்டேன்.இழந்த அன்பை அவர்களுக்கு நினைவூட்டமாட்டேன்.என்னுடைய பிரிதல் என்பது இலகுவானது.அது கடலின் ஆழத்தில் உள்ளதை போல அமைதியானது.அவர்கள் போகட்டும் மூர்த்தி.ஆனால் எல்லாவற்றையும் விட என் இதயத்தை கிழத் தேடுத்தது என் அக்காவினுடைய மாற்றம் தான்.எப்போதும் நான் அவளின் பாசத்திற்கு ஏங்குபவனாகதான் இருக்கிறேன்.பெற்ற தாயை பிள்ளை மறுப்பது தகுமோ?இந்த தனிமை வித்தியாசமானது இருப்பதை இல்லாததை போல் காட்டுகிறது இல்லாத ஒன்றை இருப்பதாய் நினைக்க வைக்கிறது.ஆகட்டும்,என்ன இழந்தோம் என்று பார்ப்பதை விட என்ன மீதம் இருக்கிறது என்று சிந்திப்பது தானே புத்திசாலித்தனம்.இனனும் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கிறதே!என் பிரச்சனை இங்குதான் மூர்த்தி யார் மனதையும் காயப்படுத்தி விட கூடாதென்பதற்காக என்னையே நான் வருத்திக்கொள்கிறேன்.அப்படித்தான் என்னுடைய அவளது தொடக்கமும் முடிவும் இருந்தது எனலாம்.எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்த அவளது அன்பு.பல்லாயிரம் வார்த்தைகளை பரிமாரியிருப்போமே.என் தனிமை என்னும் கோப்பையில் அவள் அன்பென்னும் நீர் பிழிந்து ஊற்றி நிறப்பினாள். அந்த நாட்கள் தான் எவ்வளவு அழகானவை.அந்த கனிவான குரல் கேட்காது விடியல் கூட இல்லை.இருட்டிற்கு ஒளி கொடுக்க தோன்றிய நட்சத்திரம் பாதியில் மறைந்துபோவதில் என்ன அர்த்தம் இருக்கிறது சகா.அந்த கொஞ்ச நாட்கள் என்னுடைய வெள்ளை நாட்கள் என்பேன்.அந்த தூய்மையான அன்பை இழந்ததற்காக இன்னமும் நான் வருந்துகிறேன்.அந்த கனிவான சொற்களையும்,பணி போன்ற பேரன்பினையும் எண்ணி எண்ணி இன்று அது போல் இல்லையே என்று நிதம் ஏங்கி அழத மனம் ஒன்று எனக்கில்லை மூர்த்தி.ஆனாலும் அந்த சிறிது கால அன்பிற்காக நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.தனிமை சூழ்ந்த என் இருட்டு இதயத்திற்கு அன்பினால் கொஞ்ச காலம் ஒளி கொடுத்தாள் இல்லையா!
இப்போதைய நான் வேறு. யாருடைய அன்பிற்காகவும் நான் ஏங்கி நிற்பதில்லை,காதிருப்பதுமில்லை.ஒரு நாள் காலை தூங்கி எழும் போது எல்லாவற்றையும் நான் மறந்துபோயிருப்பேன்.அப்போது காயம் ஆரியிருக்கக்கூடும்.அவர்கள் நெடு தூரம் போயிருக்கலாம்.ஆனால் எனக்கு தெரியும்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அன்பு ஒருபோதும் காலாவதி ஆவதே இல்லை,ஒருவேளை அதன் சுவை கொஞ்சம் குறைந்திருக்கலாம்.

மூர்த்தி,எழுத்தை தவிர மிகப்பெரும் ஆறுதல் எனக்கு என்ன இருக்கமுடியும் என நினைக்கிறாய்.எனக்காக லட்சியம் மட்டுமே இன்னும் மாறவில்லை.மாறப்போவதும் இல்லை.எழுத்து வாழ்வு லட்சியம் இவைகளே என்னுடைய இப்போது பயணிப்பாவை.....



அன்புடன்
சென்.

எழுதியவர் : Sen (15-Jan-20, 10:12 pm)
சேர்த்தது : சரவண பிரகாஷ்
பார்வை : 387

மேலே