புத்தாண்டு
புத்தாண்டு
கவலைகள் களைந்து மனமது
மகிழ்வில் களித்தபடி...
நம்பிக்கை விதைகளை
எண்ணத்தில் தெளித்தபடி....
வளத்தினை உயர்வினை
விளித்தபடி.....
ஒருவருக்கொருவர்
வாழ்த்துக்களை அளித்தபடி...
கொண்டாடப்படுகிறது
ஆண்டின் முதல் நாளான
புத்தாண்டு!
ஆண்டு முழுதும் அந்நாளினைப்போல்,
உற்சாக ஊற்று மாறாது,
மனமது மாறி சோராது,
அயரா
உழைப்பால் வெற்றி
காண்போர்க்கு,
பிறரை ,
வாழ்த்திப் போற்றி
வாழ்வோர்க்கு,
தினம் தினம்
தித்திக்கும் புத்தாண்டே!
ஒவ்வொரு ஆண்டும்
முத்தாண்டே!