மனிதரில்லா மாளிகை
மனிதரில்லா மாளிகை
கோடிகளை கொட்டி கட்டிய
கட்டிடம் !
அழகு வேலைகள் ஆயிரம்
உண்டு !
வண்ண வண்ண ஓவியங்கள்
முகப்பறையில் !
பார்க்கும் முகம் தெரியும்
பளிங்கு கற்கள் !
மர வேலைகளின் இறக்குமதி
மலேயாவோ, பர்மாவோ !
சமையலறையின் சுத்தம்
பள பளக்கும் கை வண்ணம் !
மாடி முகப்பில் மாடம்
பாதுகாப்பாய் கண்ணாடி கவசம்
பின் புறத்தில் அழகான
நீச்சல் குளம் !
சுற்றி வர பளிங்குத்தரை !
வீட்டை சுற்றி பாதுகாப்பு
வேலி !
பூட்டிய கதவுக்கு வெளியே
காவல்காரன் மட்டும் !
அவன் குடியிருக்க சிறு குடிசை
குடிசைக்குள் அவனோடு ஆறு பேர் !
காதைக்கொண்டு வாருங்கள் இரகசியம் !
கட்டிடத்தின் உரிமையாளன் முதியோர்
இல்லத்தில் !
வாரிசுகளோ அயல் நாட்டில்