தேவதை

ஒரு பேரழகியைப்பற்றி
நினைவுகூறும்போது
சொற்கள் சிக்காமல் எங்கோசென்று
பதுங்கிக்கொள்வதேன்??
அவள் பூமுகமும்
புன்னகையும்
பேசிய விதமும் நடையும்
ஒட்டுமொத்தப்பெண்மையின்
ஓருருவான தோற்றமும்
அவளைசிந்திக்கும்போதே
சிலிர்க்கச்செய்கின்றன..
எத்தனைபேரால் காதலிக்கப்பட்டு
கனவுகளின் சாம்ராஜ்யத்தில்
கோலோச்சுகிறாளோ தெரியாது..
இப்போதுவரை தனித்தவள் என்கிறாள்.
அடி பெண்ணே..கேள்..
உன்னிடம் வியந்த ஒன்றைக்கூறுகிறேன்..
உன் நிழலும்கொஞ்சம்
நிறமேற்றிக்கொண்ட அதிசயம்
உலகத்தில்
உன்னிடம் மட்டுமே..
மௌனமாய் ரசிக்காமல் ஒத்துக்கொள்
உண்மையில் நீ பேரழகிதான்
என்று.

Rafiq

எழுதியவர் : M.MOHAMED RAFIQ (18-Jan-20, 11:04 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 290

மேலே