எனது காதல் கடிதம்
எனை பேச கூட அனுமதிக்கவில்லை ..
ஆனால் நானோ
உன் மேனி மீது உரசிய காற்றினை சுவாசித்தேன்...
உன் மூச்சுக்காற்றின் வெப்பம்
உணர்ந்தேன்..
உன் நிழலை தீண்டி பேருஉவகை
அடைந்தேன்..
உன் வியர்வைதுளியை புல்மேற்பனியென அதிசயித்தேன்...
உன் அனுமதியின்றி உந்தனழகை ரசித்தேன்...
கற்பனை கனாவில் உன்னோடு வாழ்ந்த உன்ரசிகன் எனக்கு நிஜத்திலும் அனுமதிப்பாயா!!?
அணங்குகொள்ளே உந்தன் அமைதி விடுத்து அனுமதிக்காக காத்திருப்பேன்..
இப்படிக்கு உந்தன் ரசிகன்