என்னடா நீ அப்பன்

புத்தனே நீ என்ன சிறந்த சித்தனோ
நட்ட நடு இரவில் கெட்ட சிந்தனையோடே
பெற்ற பிள்ளையைும் கொண்ட மனைவியையும்
திண்டாட விட்டு விட்டு இரண்டகம் செய்தவனே
சுற்றத்தோர் உறங்கியிருக்க சூழ்நிலை இருண்டிருக்க
பத்தினி மனைவி இவள் என பார்த்தோர் வியந்திருக்க
யசோதராவை ஏமாற்றி விட்டு உலகவாசம் வந்தவனே
இராகுலன் என்ற பிள்ளை இலவு காத்த கிளியாக
இருள் மனம் கவ்விக்கொள்ள இலக்கணம் வகுத்தவனே
சுத்தோதனர் மனப்பதைப்பை சுத்தமாய் மறந்தவனே
எத்தகை ஞானம் பெற்றாலும் இக்குறை நீங்குமோ
முடியை மழித்தென்ன மும்மூலம் ஒழித்தென்ன
வாழ்க்கை நெறியினிலே வழுக்கி விழுந்தவனே
வளமான கருத்துக்களால் வகுத்தாய் வாழ்க்கையை
எனவே மன்னித்து உன்னை போற்றுகிறோம்.
- - - - -நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (20-Jan-20, 8:58 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : ennadaa nee appan
பார்வை : 202

மேலே