மின்னல்விழி மேனகா

மென்மலர் மெல்லித ழில்வெண் பனித்துளிபோல்
புன்னகைச் செவ்விதழில் முத்துச் சிதறல்கள்
கன்னக் குழிவுகளில் காதலின் ஓவியமோ
மின்னல் விழிமேன கா !


மென்மலர் மெல்லித ழில்வெண் பனித்துளிபோல்
புன்னகைச் செவ்விதழில் முத்துக்கள்- இன்கனிமாக்
கன்னக் குழிவுகளில் காதலின் ஓவியமோ
மின்னல் விழிமேன கா !

------ஒருவிகற்ப இன்னிசை நேரிசை வெண்பாக்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jan-20, 5:50 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 87

மேலே