அவளின் அன்பு ♥️♥️

அவளின் அன்பு ♥️♥️

உன் விழி எய்திய அம்பு
என் இதயத்தில் காதல் மாலையாக விழுந்தது.
உன் வர்ணஜால புண்ணகையால் பாலைவன வாழ்க்கை சோலைவனமானது.
உன் அதிசிய பேச்சு
என்னுள் நம்பிக்கை தூன்கள் எழுப்பி
தன்னம்பிக்கை தளம் அமைத்தது.
வானவீதியில் வலம் வரும் வட்ட நிலா நீ !
உன் கரம் கொண்டு என்னை கட்டி அனைத்தாய்.
முத்தம் கொடுத்தாய்.
உன்னால் முடியும் என்றாய்.
மூச்சு ஒரு நிமிடம் நின்றது.
உயிர் உன்னிடம் சரண் அடைந்ததால்.
இனி நீ இருக்க எனக்கேன்ன கவலை.
இதோ கிளம்பிவிட்டேன்
வாழ்க்கையை ஒரு கை பார்க்க.
இதோ வேகமாக நடக்கிறேன் வாழ்க்கையை வசந்தமாக்க.
இதோ மிக வேகமாக ஓடுகிறேன் வாழ்க்கையின் வெற்றியை கொண்டாட.
இதோ மலை உச்சியில் இருந்து உறக்க சொல்கிறேன்
நான் என்னவளின் அன்பால் இன்னும் நிறைய சாதிப்பேன்.

- பாலு.

எழுதியவர் : பாலு (22-Jan-20, 5:09 pm)
பார்வை : 404

மேலே