மப்பும் மந்தரமுமாய்
மப்பும் மந்தாரமுமாய்
சோம்பி கிடக்கும்
வானம்
இருளா மழையா?
வெயிலா நிழலா?
இரு வேறு குழப்பங்கள்
எதுவானால் என்ன
வீசிவிட்டு போவோம்
கடமைக்காக வீசும்
காற்று
இறுதலை கொள்ளியாய்
மரங்கள்
தலையை அசைக்கவா
வேண்டாமா?
ஏன் இத்தனை சோம்பல்
இயற்கைக்கு !
ஏதேனும் ஒன்று
மின்னலாகவோ, மழையாகவோ
சுரீரெரென்று சுட்டெரிக்கும்
சூரியனாகவோ
இவைகளை எழுப்ப
வேண்டும்
இல்லையென்றால்
சூழ்நிலை
ஒரு வித மப்பும்
மந்தாரமுமாய் இருந்து விடும்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
