உன் நினைவுகள்
பலமுறை தடைப்போட்டாலும்
மண்ணைவிட்டு நீங்குவதுமில்லை
மண்ணிலே மக்குவதுமில்லை
பிளாஸ்டிக் பொருட்கள் -
அதனைப்போலத்தான் -
என்னவளே - நீ
எத்தனைமுறை தடைப்போட்டாலும் -
எனக்குள்ளே மக்குவதுமில்லை
என்மனதைவிட்டு நீங்குவதுமில்லை
உன் நினைவுகள்.......♥♥♥
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி