நண்பன்

ஆகாரம் உண்ணவும் வெறுக்கிறேன்
தாகத்தில் அருந்தவும் தவிர்க்கிறேன்
குளிரிலும் வெந்து நான் துடிக்கிறேன்
வெயிலிலும் குளிரினால் தவிக்கிறேன்
தவிப்பிலும் வெடிப்பிலும் வேகிறேன்
தனிமைச் சிறையிலே நான் வாடுறேன்
பிரியவே முடியாது காய்கிறேன்
உனை புரியவே வழியில்லை மாய்கிறேன்
அன்று ஆற்றில் மூழ்கிய போது என்னுயிர்காக்க
உனையே துச்சமாய் மதித்தவன் நீயடா
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அத்தனையிலும்
தோழனாய் நீயேதான் எனக்கு வேண்டுமடா
வந்திடு ஒருமுறை உடல் மனம் நோகுதடா
தந்திடு உன் தரிசனம் அது ஒன்றே போதுமடா
அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (27-Jan-20, 11:15 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : nanban
பார்வை : 891

மேலே