கைதளம் பற்றி

மழையாய் இருந்தால் என்ன?
இடியாய் இருந்தால் என்ன?
புயலாய் இருந்தாலும்,
உன்னை பிரியாதிருப்பேனே..!!!

படிகள் சரிந்தால் என்ன?
தடைகள் குவிந்தால் என்ன?
படைகள் எழுந்தாலும்,
அதனைத் தனியாய் எதிர்ப்பேனே..!!!
நேர்மை தான் வெல்லும்,
எது நேர்ந்தாலும், நேசம் தான் வெல்லும்..!!!

பூவைக்கு பூ மாலை சூட்டி,
கைகளில் பொன் வளை பூட்டி
பேரிகை பல்லாக்குடன்,
உன்னை ஊர்வலம் வர சைவேன்…!!!

தெவதை கைதளம் பற்றி,
எரியும் நெருப்பை சுற்றி..,
தெவர்கள் அருளோடு,
உனக்கு சேவகம் புரிவேனே..!!!

காதல் தான் வெல்லும்,
எவன் தடுத்தாலும், காலம் தான் சொல்லும்…!!!

எழுதியவர் : சீனு (28-Jan-20, 7:51 pm)
சேர்த்தது : சீனு
பார்வை : 68

மேலே