காதல்

எனக்குள் உன்னை உணர்ந்தபோது
உணர்ந்தேன் எனக்குள் காதலை;
உயிருக்குள் உன் வாசம் வந்த போது
தெளிந்தேன் என் காதலை;
உலகமே வெறுத்தபோது உன்னிடம்
உரைத்தேன் எனக்குள் நீ என்று ;
உலகம் என்னை வெறுக்கும் முன் அன்பே
என்னை ஏற்றுக்கொள் ; - இது
வேண்டுகோள் அல்ல;
உன்னை என் காதலின் தோழனை என்னின்
அரசனாக்கும் முடிவின் குரல்;
இனி நம் வாழ்வின் ஆரம்பம் ;

எழுதியவர் : சம்யுக்தா ( நரேனி தாசன் ) (28-Jan-20, 9:20 pm)
Tanglish : kaadhal
பார்வை : 254

மேலே