அர்ச்சனைக்கு பச்சிலை

அர்ச்சனைக்கு பச்சிலை

திருமூலர் சொன்னார்

யாவர்குமாம் இறைவர்க் கோர் பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற் கோர் வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதோர் கைப்பிடி

இறைவர்க்கு அர்ச்சிக்க பச்சிலையே தகுதி என்று உணர்த்தினார்.

இதையே திருவள்ளுவரும் ஞானவெட்டி 1500 பாடல் என்ற நூலில்

கோல மறியாமல் வில்வக் கொழுந்தை முறித்தினி
கூகைகள் போலவும் சாலவும் தேவாரம் ஒதித் துதித்துடன்
சங்கையறியாமல் பங்கப்பட்டேயினி காலைதனிலெழுந்து ஆல
யஞ்சுற்றிக் கருத்தினில் வாசி கொண்டு துதியாமல் சீல மலரை
உயிரென்று அறியாமல் சென்று பறித்து யான்கொண்டுவந்து
அர்ச்சனை

திருமூலரின் பாடலையும் மிஞ்சுவதாக திருவள்ளுவர் பாடல் அமைந்துள்ளது.
திருவள்ளுவர் வில்வக்கொழுந்தை முறித்து இதுவரை கூகையைப்போல தேவரத்தை
ஒதி முறைதெரியாது பங்கப்பட்டேன்

காலையில் எழுத்து உடல் சுத்தி முடித்து ஆலயஞ்சுற்றி கருத்தினில் மூச்சுக்கலை யால்
ஆண்டவனை தொழாமல் அழகு மலர்களை உயிரென்று நினையாமல் அவற்றைப் பறித்து
அவற்றால் அர்ச்சனை செய் தேனே. மாபெரும் தவறு என்று மற்றவர்களுக்கு உணர்த்த
தன்னையே கடிந்து கொள்வதுபோல் எழுதியுள்ளார்

எழுதியவர் : பழனிராஜன் (30-Jan-20, 9:04 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 77

மேலே