கொவ்வை வாயில் முத்தமிட்டு

அகன்ற அடர்ரோம என் மார்பில்
அத்தை மகளே உன்னை அணைச்சி
அணுக்கள் எல்லாம் அதிர அதிர
கொவ்வை வாயில் முத்தமிட்டு
உப்பிய கன்னம் உருக உருக
ஒவ்வொரு அங்குலமாய் இதழ் பதித்து
நரம்பில் ஓடும் நாடியின் வேகம்
நடுக்கத்தால் கிடுகிடுக்க நவதுவாரமும்
குளிர்ந்து பனிக்கட்டியாய் விரைத்திருக்க
கிறுக்கு பிடித்ததைப் மனம் பேதலிக்க
வெட்கத்தால் என்னை உதறிச்சென்ற
வெற்றிலைக் கொடி இடையாளே
விக்கித்து நிற்கும் என்னை
விரைந்து வந்து ஆட்கொள்ளுவாயோ.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (30-Jan-20, 8:18 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 227

சிறந்த கவிதைகள்

மேலே