மனதிற்குள் வைத்து
செவி வழிச் செய்தியை ஒரு வழிப் பாதையாய்
உட்கிரகிக்கும் எவரும் பகிர்வதைக் கொள்ளாமல்
மனதிற்குள் வைத்து மனம் போல் எண்ணி
தமக்கென ஒருவாறு உருவகப்படுத்தி
பூதாகரமாக்கி புதுவகை முறையில் பிரச்சனை செய்து
உண்மை நிலையினை உணராமலேயே
ஒரே நிலையிலேயே உழலுகின்ற நபர்களால்
உருளுது இவ்வுலகம் ஓயவில்லை துன்பம்
யானையைக் குருடர்கள் ஒருவாறு தடவி
உள்ளுக்குள் அதனை உருவமாய் புனைந்து
மனமதில் இருந்திய இறுதி நிலையினை
களிறு என்று கூறினால் சரியான நிலையோ
அது போல் யாவும் செவி வழி கூற்றாம் .
----- நன்னாடன்