எல்லோருமே ஹீரோ தான்

வினையும் குருவும் மாலை நேரத்தில் வழக்கமாக ஒரு டீ கடையில, டீ குடிப்பது வழக்கம்.....அன்று...அலுவலக தேநீர் இடைவேளையில்.....

என்ன வினை டீ பிரேக் போகலாமா..?

ம்ம்.....
ஒரு நிமிடம் குரு... வந்துற....
நீங்க லிப்ட் கிட்ட... வெயிட் பன்னுங்க...
நான் வந்துற...

ஓகே வினை வாங்க... நான் வெயிட் பன்ற...

(சில நிமிடம் கழித்து...)

சாரி குரு... கொஞ்ச லேட் ஆயிடுச்சு...

பராவயில்ல வினை.. வாங்க போல....

(லிப்டில்....)

குரு 'பைக்'ல போலாம்மா...

வேண்டாம்...வேண்டாம்... வினை, பக்கம்தானே நடந்தே போகாலாம்...

ஆமாம்...ஆமாம்... குரு நடந்தே போகலாம்... பெட்ரோல் விக்கிற விலைக்கு... நடக்கிறது தா நல்லது....

( டீக்கடையில்... )

அண்ணே... ஸ்ட்ராங்கா இரண்டு டீ போடுங்க...

அப்புறம் குரு , பஜ்ஜி.. போண்டா... ஏதாச்சும் வேணுமா..?

வேண்டாம் வினை... வாரத்துக்கு ஒருநாள் சாப்பிட்டா போதும்...

நீங்க சொல்றது சரிதா குரு... ஆனா சூடா பஜ்ஜி போடும்போது எங்க மனசு கேக்குது....

நான் இரண்டு பஜ்ஜி சாப்பிட போற...

நீங்க சாப்பிடுங்க வினை...
எனக்கு செட் ஆகாது...
அதிகமான ஆயில்...
நம்ம ஆயுளுக்கே நல்லது இல்ல...

கரெக்ட் தான் குரு... புத்திக்கு தெரியுது... மனசுக்கும் - நாக்குக்கும் தெரிய மாட்டாங்கதே... ம்ம்... கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்குற.....

சரி... சரி...வினை டீ வந்துடுச்சு.... குடிங்க...

ப்பா...
செம சூடா இருக்கு குரு...
கொஞ்ச பொறுமையா குடிங்க....
உங்க வேகத்துக்கு என்னால குடிக்க முடியாது....

ஓகே... ஓகே...வினை
நீங்க பொறுமையா குடிங்க....
நான் குடிச்சுட்டு... பணம் கொடுக்குற...

ம்....ஓகே....
நீங்க பணம் கொடுத்துடுங்க குரு..
நான் ஆபிஸ்ல வந்து உங்களுக்கு தர...

( குரு பணம் கொடுத்து முடிக்கவும், வினை டீ குடித்து முடிக்கவும் சரியாக இருந்தது....)

என்ன வினை டீ குடிச்சாச்சா..? போகலாமா... ?

ம்... போகலாம் குரு... அப்படியே பக்கத்து கடையில ஒரு மிக்ஸர் பாக்கெட் வாங்கிட்டு போகலாம்... ஏன்னா.. சாப்பிட்டு கிட்டே வேலை செய்தா... தூக்கம் வராது...

ஓகே.. ஓகே..
வாங்க.... வாங்கலாம்...

( ஸ்நாக்ஸ் கடையில்... )

அண்ணா... ஒரு மிக்ஸர் பாக்கெட் கொடுங்க...
தம்பி மிக்ஸர் இல்லப்பா...
காரசேவ் தா இருக்கு...

வினை..
மிக்ஸர் இல்லையா...
காரசேவ்தா இருக்கா...
வாங்கவா...??

ம்... வாங்குங்க குரு

சரி கொடுங்கண்ணா..

( காரசேவ் வாங்கிய பின்...இருவரும் அங்கிருந்து புறப்பட்டாா்கள்...)

கொஞ்ச தூரம் சென்றதும்...

குரு அந்த காரசேவ்வ கொடுங்க...

ஏன் வினை...?
ஆபிஸ்ல போயி சாப்பிடலாமே...!

அட கொடுங்க குரு... நீங்க வேற..
சாப்பிட :- நேரம் காலம் பாா்த்துகிட்டு...

அப்புறம் உங்க இஷ்டம் வினை.. இந்தாங்க...

எல்லாம் சாப்பிட்டது ஜீரணமாக நடப்பாங்க.....
இங்க பல பேரு...
நடக்கும்போதே சாப்பிடுறாங்க....

என்ன குரு சொன்னீங்க..?

ஒன்னுமில்ல வினை...
நீங்க பிரிச்சு சாப்பிடுங்க...

ம்... பிரிச்சாச்சு....

உங்களுக்கு....?

நான் அப்புறம் சாப்பிடுற...

தூ...தூ...தூ...

என்னாச்சு வினை..?

ஏன் துப்புறீங்க...?

குரு... காரசேவ் கெட்டு போயிருக்கு... எண்ணெய் சிகிடு வாசனையும் வருது...

எங்க.. கொடுங்க வினை

இந்தாங்க குரு

( குரு சாப்பிட்டுவிட்டு..)

ஆமாம் வினை..... கெட்டு போச்சு...
சாப்பிட வேண்டாம்....

வினை...
வினை...
என்ன செய்றீங்க....?

குப்பையில போட போற...

போடாதீங்க வினை...
கடையில கொடுத்து வேற ஏதாச்சும் வாங்கல...

அட வேண்டாம் குரு...
காரசேவ் பாக்கெட்டை வேற பிரிச்சிட்டும்...
இனிமே கொடுத்தா....கடைக்காரன் வாங்கமாட்டான்....

அதல்லாம் ஒன்னுமில்லை வினை... நாம எடுத்து போய் கொடுப்போம்... கெட்டுபோச்சுன்னு சொல்லுவோம்...

எனக்கென்னவோ வேண்டாம்னு தோனுது குரு...
அப்புறம் அந்த கடைக்காரன் சண்டை போட போற...
பணம் போன போது குரு

என்ன வினை அப்படி சொல்லிடிங்க... அஞ்ஞோ... பத்தோ... எல்லாம் கஷ்டப்பட்ட தான் வருது... அதுவும் இல்லாம, நாம சொல்லாம விட்டுட்டா, அந்த கடைக்காரர், இதையே தான் எல்லாருக்கும் வித்துகிட்டு இருப்பாா்...

சரி.. சரி...
வாங்க குரு கேக்கலாம்....

( ஸ்நாக்ஸ் கடையில்...)

அண்ணா... இந்த காரசேவ் கெட்டு போயிருக்கு... வேற ஏதாச்சும் நல்லதா
இருந்தா கொடுங்க...

ஒரு நிமிஷம் தம்பி...
-என்று சொல்லிய கடைக்காரர் கடைக்கு வந்திருந்த மற்றவர்களை கவனிக்க ஆரம்பித்தார்....

குரு.. நான்தான் சொன்னலே..
அவன் நம்மள கண்டுக்கமாட்டான்னு... வாங்க போகலாம்...

கொஞ்சம் பொறுமையா இருங்க வினை....
வந்தவங்க எல்லாரும் வாங்கிட்டு போன பிறகு கேட்போம்...
வெயிட் பன்னுங்க...

ம்... சரி குரு...
நான் சொன்னா...
நீங்க விடவா போறீங்க...

( சிறிது நேரம் கழித்து - கடைக்காரர் )

தம்பி...

இங்க வாங்க என்று கூப்பிட்டாா்....

குரு.. கடைக்காரிடம் சென்று...

அண்ணே... இந்த காரசேவ் கெட்டுபோச்சு....வேற ஏதாச்சும் நல்லதா இருந்தா கொடுங்கண்ணா...

ம்... அப்டியா....தம்பி...
எப்ப வாங்கினீங்க...?

இப்பதாண்ணா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி....

நம்ம கடையில.. எல்லாமே தரமா தாம்ப்பா இருக்கும்...

இல்லண்ணே... நிஜமாவே கெட்டு போயிருக்கு... நீங்களே பாருங்கண்ணா...

எங்க கொடுங்க...

இந்தாங்கண்ணே...

வாங்கிய காரசேவ் பாக்கெட்டை...
ஒரு ஓரமா வச்சுட்டு... கொஞ்ச இருங்க தம்பி என்று... மீண்டும் கடைக்கு வரும் புதிய நபர்களை கவனிக்க தொடங்கினாா்... கடைக்காரர்...

நேரம் கடந்தது...

வினை குருவிடம் வந்து...

குரு... இது ஆகற மாதிரி தெரியல...
வாங்க நாம போகலாம்...இனிமே இந்த கடையில வாங்க வேண்டாம்... நாம வேற, நல்ல கடையில வாங்கிக்கலாம்..

வினை வெயிட் பன்னுங்க.. இந்த காலத்துல படிக்காதவங்க தா - எதையுமே தைரியமா கேக்கிறாங்க... படிச்சவங்க நமக்கென்ன - அப்டின்னு அடுத்த கடைக்கு போயிடுறாங்க...

இன்னிக்கு இதுக்கு விடை கிடைக்காம, நாம இங்கிருந்து போகிறது இல்ல... என்று குரு சொல்லிக் கொண்டிருக்கும்போதே.....

ஒரு 50 வயது மிக்க பெரியவர்..
கடைக்கு வந்து...
யாருப்பா கடை ஓனர்... என்று கேட்க...

உடனே கடைக்காரர் - நான்தான் பெரிசு ஓனர்..
சொல்லுங்க....என்ன வேணும் உங்களுக்கு...?

நான் உணவு பாதுகாப்புத் துறையில இருந்து வர.. உங்க கடை லைசென்ச காட்டுங்க...

ஒரு நிமிடம் சார்... லைசென்சு மேல்தளத்தில இருக்கு.. கொண்டுவர...

( உணவு பாதுகாப்புத் துறை அப்படின்னு சொன்னதும் , 'பெரிசு' ன்னு கூப்பிட்ட கடைக்காரர் , ' சார்' என்று கூப்பிட்டாா் )

கடைக்காரர் நாங்க கொடுத்த கெட்டுபோன காரசேவ் பாக்கெட்ட எடுத்து, லுங்கியிலபோட்டு மடிச்சுகிட்டு, மேல்தளத்திற்கு சென்றாா்....

குரு நல்ல சேன்ஸ் கிடைச்சிருக்கு...
இந்த அதிகாரிகிட்ட நடந்த விசயத்தை சொல்லலாம்...
கடவுளா பாா்த்து, நமக்கு இவரு அனுப்பி வச்சுருக்காரு...என்ன சொல்றீங்க....

கொஞ்ச இருங்க வினை..பாா்ப்போம்...

மேல்தளத்திலிருந்து வந்த கடைக்காரர்,
கடை லைசென்ச , அந்த அதிகாரியிடம் கொடுத்தார்...

அந்த அதிகாரி.. லைசென்ச பாா்த்தவண்ணமாய் கடைக்குள் சென்று பரிசோதிக்க தொடங்கினாா்...

இதற்கிடையில் கடைக்காரர் எங்கள் இருவரையும் அழைத்து, தம்பி உங்களுக்கு என்ன வேண்டுமோ எடுத்துக்குங்க.. என்றாா்..

அந்த வறுகடலை பாக்கெட்டை கொடுங்க என்று குரு கேட்க...

உடனே அந்த கடைக்காரர் , வறுகடலையை எடுத்து குருவிடம் கொடுத்து - கண் அசைவிலும், சத்தமில்லாமல் உதட்டசைவிலும் ஏதோ கூறினாா்..

ப்பா... குரு , ஒருவழி மாத்தியாச்சு.. வாங்க போகலாம்...

கொஞ்ச நேரம் வெயிட் பன்னுங்க வினை..

இன்னும் என்ன இருக்கு குரு....?
அதான் வாங்கியாச்சுல...
வாங்க போகலாம்...

இருக்கு...வினை...
இன்னும் கொஞ்சம் இருக்கு...
வெயிட் பன்னுங்க...

அதற்குள் அந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி அந்த கடைக்காரரிடம் :

ஏம்ப்பா கடைக்காரரே...
எல்லா பொருளும் தரமா தானே இருக்கு... ஏதாச்சும் தரம் இல்லாம வெச்சுருந்தா..., கடைக்கு சீல் வச்சுருவ பாா்த்துக்கோ...
அப்புறம் ஊரு பேரு இல்லாத ஸ்நாக்சு, தேதி குறிப்பிடாத ஸ்நாக்சு... இதெல்லாம் இருக்க கூடாது....
அப்புறம் சீல் வச்சபிறகு வந்து கெஞ்சறதுல எந்த பிரயோஜனமும் இல்ல......என்றாா் அதிகாரி

சரிங்க.. சார்....
கண்டிப்பா சார்...
எல்லாம் சரியாயிருக்கும் சார்... என்று தலையசைத்தாா் கடைக்காரர்..

சோதனையை முடித்த அதிகாரி கடையின் லைசென்ச , கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு புறப்பட்டாா்...

(அந்த அதிகாரி சென்றபிறகு...)

குரு கடைக்காரரிடம் சென்று...

அண்ணே.. இந்தாங்க 5 ரூபாய்...

எதுக்கு தம்பி....? என்றாா் கடைக்காரர்

அது இல்லண்ணே...
காரசேவ் பாக்கெட் 15- ரூபாய் தான்... ஆனா வறுகடலை பாக்கெட் 20- ரூபாய், அதான் நான் உங்களுக்கு 5 ரூபாய் தரனும்...இந்தாங்க...

உடனே கடைக்காரர்...
தம்பி.... தம்பி...
நீங்க எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கீங்க... 5-ரூபாய் ல வேணாம்ப்பா... நான் வேணும்னா, நீங்க கொடுத்த 15-ரூபாய தரன்... இலவசமாவே வெச்சுக்குங்க... அந்த அதிகாரி கிட்ட என்னை மாட்டிவிடாம இருந்திங்கலே அதுவே போதும்...

அண்ணே.. சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க...
நீங்க இலவசமா எதுவும் தர வேண்டாம்...
நாங்க கொடுக்கிற காசுக்கு தரமா கொடுங்க போதும்...
உங்கல நம்பி தான் , நாங்க பொருள வாங்குற...
நாங்க ஒவ்வொருத்தரும் உங்க கஷ்டமர் தாண்ணே....
நீங்க கொடுக்கிற பொருள், தரமா-தா இருக்கும் அப்டின்னு , நாங்க நாலுபேருகிட்ட சொல்லி, உங்க கடைக்கு வர சொல்றாம்ல...
அதுதான் நம்பிக்கையான வியாபாரம்...
மக்கள் தரும் ஆரோக்கியமான விளம்பரம்தாண்ணே மிகச்சிறந்த வியாபாரத்துக்கு அடித்தளம்....
உங்க பொருள்தேடல்மட்டும் கவனம் செலுத்தாம...
கஷ்டமர் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்க...
இது தாண்ணே நீங்க சமுதாயத்திற்கு செய்யுற பேருதவி - ஆரோக்கியமான பேருதவி - இந்தாங்க 5 ரூபாய் - எடுத்துக்குங்க...

( ஒரு வழியாக குருவும் வினையும் அங்கிருந்து புறப்பட்டார்கள்.... )

ஏன் குரு நீங்க இவ்வளோ சொல்லியும்... அவன் மாறுவான்னு நினைக்கிறீங்களா...?

கண்டிப்பா வினை... அதுல என்ன சந்தேகம்..?

எனக்கு என்னமோ...,
அவன் மாறமாட்டான்னு தோனுது...
அவன ஒருதடவை அந்த அதிகாரி கிட்ட மாட்டிவிட்டிருந்தா... புத்தி வந்திருக்கும்...

அதுக்கில்ல வினை... அவனுக்கும் குடும்பம் குழந்தை அப்டின்னு இருக்கு... நாம - நம்மை பக்கத்த- மட்டுமே யோசிக்க கூடாது... அடுத்தவங்க நிலையும் யோசிக்கனும்... அவன் நடுத்தெருவுல நிக்கனும், அப்டிங்கிறது நம்ம நோக்கம் இல்ல.. அவன் தரமானத விற்கனும் அப்டிங்கிறது நம்ம நோக்கம்.. அதுவும் இல்லாமா.. அவரு அந்த அதிகாரி இருந்தபோ... கையெடுத்து வணங்கி... கண்ணாலேயே மன்னிச்சிடுங்க என்று சைகை செய்தார்.... தான் தப்ப உணர்ந்திட்டாா்.... அதான்...

அட போங்க குரு...

இந்த காலத்துல -
'அவன்... அவன்.. சான்ஸ் கிடைச்சா போதும்னு...அடுத்தவ வாழ்க்கையில ஒரு குழி மண்ணு இல்ல, ஒரு லாரி மண்ண கொட்டி, கதைய முடிக்க ரெடியா இருக்கானுங்க....'

ஆனாலும்...
நீங்க கிரேட் குரு...
நீங்க தான் ஹீரோ...

இல்ல வினை..

தப்பை சுட்டிக்காட்றவங்க ஹீரோ...
தப்பை தட்டிக் கேக்கிறவங்க ஹீரோ...
நல்லத நினைக்கிறவங்க ஹீரோ...
நல்லதுக்காக போராடுபவர்கள் ஹீரோ...
நல்லது நடக்கனும்னு, கேள்வி கேக்கிறவங்க ஹீரோ.....
நம்மை சுற்றி இருக்கிற ஒவ்வொருத்தரும் இப்படி ஒருநாள் கேள்வி கேட்பாங்க... அந்த நாள்ல...

நாம "எல்லோருமே ஹீரோ"தான் வினை..

- நட்புடன் கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : கவிஞர் நளினி விநாயகமூர்த (31-Jan-20, 11:41 am)
Tanglish : ellorume hero thaan
பார்வை : 259

மேலே