அசுகா

ஏன்டா சிரிகாளி...
@@@@
அம்மா, நீங்க எனக்கு வச்ச பேரு காளி. நான் அதை 'ஶ்ரீகாளி'ன்னு மாத்திட்டேன். என் நண்பர்கள் என்னை 'ஶ்ரீகாளிஜி'ன்னுதான் கூப்புடுவாங்க.
@@@@@
போடா சரிகாளிசி. அது கெடக்கட்டும் போன வாரம் பொறந்த எம் பேத்திக்கு என்ன பேருடா வச்சிருக்கறீங்க?
@@@@@@
உம். 'அசுகா'
@@@@@@
இன்னொரு பெண் கொழந்தை பொறந்தா அதுக்கு 'பிசுகா'ன்னு வச்சிருடா. நல்லா இருக்கும்.
@@@@@
அம்மா, அசுகா இந்திப் பேரு இல்ல. ஜப்பானிய மொழிப் பேரு. அசுகா (Adika= fragrance)-ன்னா 'நறுமணம்'ன்னு அர்த்தம்.
@@@@@@@
ஏன்னடப்பா சிரிகாளிசி எம் பேத்திக்கு 'நறுமணம்'னு தமிழ்ப் பேரை வச்சா குடியா முழுகிப் போகும். போடா தன்மானம் இல்லாத நான் பெத்த சிரிகாளிசி.
@@@@
நான் என்னம்மா செய்யறது. நம்ம தமிழ்ச் சமுதாயமே திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களைப் பாத்து கெட்டுப்போச்சு. பெத்த பிள்ளைகளுக்கு வேற மொழிப் பேரு வச்சுக்கிறத பெருமையா நினைக்கிறாங்க.
@@@@@@
ஆமாம்டா மகனே சிரிகாளிசி. ஊரோட ஒத்துப்போறதுதான் நல்லது. நம்மப் பொறுத்தவரை சப்பானும் நமக்குத் தெரியாது. இந்தியும் நமக்கு தெரியாது. வேற மொழிப் பேரு எதையோ ஒண்ணு வச்சா சரிதான்.
#@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பிறமொழிப் பெயர் மோகம், தமிழர்களின் தீராத தாகம்

எழுதியவர் : மலர் (3-Feb-20, 9:33 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 89

மேலே