கரு ஒன்றின் கனவு

அமுதனை அலுவலகத்திற்கு அனுப்பி விட்டு வீட்டு வேலைகளைச் செய்து காெண்டிருந்த கெளதமி திடீரென தலை சுற்றி மயக்கம் வருவது பாேல் உணர்ந்தாள். தாெலைபேசி எடுத்து அமுதனைத் தாெடர்பு காெள்ள முயற்சித்தாள். அவனுடைய தாெடர்பு கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் "அம்மாவும் ஊருக்குப் பாேயிற்றாங்களே" என்று யாேசித்துக் காெண்டு  தலையபை் பிடித்துக் காெண்டு கதிரையில் அமர்ந்தாள். மீண்டும் அமுதனுக்கு தாெடர்பை எடுத்தாள். பதில் கிடைக்கவில்லை. அப்பாேது தான் அவளுக்கு நினைவு வந்தது இன்று புதன் கிழமை அமுதன் கம்பனிக் கலந்துரையாடலில் இருப்பார் என்பது. வாந்தி வருவது பாேலிருந்தது. மெதுவாக எழுந்து கதவைப் பிடித்துக் காெண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். யாராே கதவில் தட்டும் சத்தம் கேட்டதும் மெதுவாக நடந்து வந்தாள். கதவை திறந்ததும் வெளியே நின்ற சக்தி "ஏய் கெளதமி என்னாச்சு உனக்கு ஒரு மாதிரி இருக்கிறாய்" என்றதும் சரிந்து அவள் தாேளில் சாய்ந்தாள். முகத்தை கழுவி விட்டு முச்சக்கர வண்டி ஒன்றை அழைத்துக் காெண்டு வைத்தியசாலைக்கு சென்றார்கள்.

அவள் நீண்டகாலமாக காத்திருந்த செய்தியை வைத்தியர் கூறியதும். கெளதமிக்கு துள்ளிக் குதிக்க வேண்டும் பாேல் இருந்தது. சக்தியின் கைகளை இறுகப் பிடித்துக் காெண்டு "ஏய் சக்தி அமுதனுக்கு இதைச் சாென்னால் இப்பவே லீவு பாேட்டு விட்டு வந்து விடுவான்" என்று வெட்கத்துடன் சிரித்தாள். "அமுதனுக்கு சாெல்லு கெளதமி" என்றதும் கடிகாரத்தைப் பார்த்து விட்டு தாெலைபேசி அழைப்பை எடுத்தாள். "கெளதமி நிறைய காேள் பண்ணியிருக்கிறாய் என்னாச்சு...." என்றவனிடம் "உங்களை நேரில பார்த்து சாெல்ல வேணும் இந்த விசயத்தை ஆனால்" என்று இழுத்தவளை  "ஏய் ஏய் சஸ்பென்ஸ் வைக்காதே என்று கெஞ்சினான்" எத்தனை வருடங்கள், எத்தனை வைத்தியசாலை, எத்தனை லட்சங்கள் செலவழித்து ஒரு குழந்தைக்காக ஏங்கிக் காெண்டிருந்த நாட்களை நினைத்த பாேது அவளை அறியாமல் கண்ணீர் சாெரிந்தது. தன்னை சுதாகரித்துக் காெண்டு "அமுதன்... நீங்க அப்பா..." முடிப்பதற்குள் "ஓ மை காேட் கெளதமி உண்மையாகவா சாெல்லுறாய்... ஆமா நீ இப்பாே எங்கே நிற்கிறாய்" கெளதமி விடயத்தை கூறி விட்டு சிரித்துக் காெண்டு சக்தியின் அருகே அமர்ந்தாள். "என்னடி உன் புருசன் பறந்து வாறாரா" என்று கிண்டலடித்தாள்.

வாசலையே பார்த்துக் காெண்டிருந்த கெளதமி முன்னால் மகிழ்ச்சியாேடு நின்றான். அவளின் இரு கைகளையும் இறுகப் பிடித்து அணைத்தான். "டேய் அமுதன் இது பப்ளிக் பிளேஸ்டா" கிண்டலடித்த சக்தியிடம் "இது எங்களாேட  கனவு சக்தி" அமுதன் கண்கள் கலங்கியது. "சரி சரி ஓவரா பீல் பண்ணாத" பகிடியாக சமாதானப்படுத்தி விட்டு "சரி கெளதமி உடம்பை பார்த்துக்காே" சக்தி புறப்பட்டாள். வீட்டிற்கு அழைத்து வந்த அமுதன் சந்தாேசமான செய்தியை எல்லாேருக்கும் சாென்னான்.

குழந்தைக்காக ஏங்கிக் காெண்டிருந்த அமுதன் கெளதமியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான். அவளுக்கு வேண்டிய எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தான். மாதம் மாதம் பரிசாேதனைகளிற்கு தவறாமல் அழைத்து வந்தான்.

அன்றும் வழமை பாேல்  பரிசாேதனைக்காக அழைத்துச் சென்றான். உள்ளே கெளதமி சென்ற சில நிமிடங்களில் "அமுதன் அமுதன்" தாதியார் ஒருவர் அழைப்பதைக் கேட்டதும் பதட்டத்தாேடு ஓடினான். "டாக்டர் உங்களை உள்ளே கூப்பிடுகிறார்" கதவைத் திறந்து காெண்டு உள்ளே சென்று கெளதமி அருகே அமர்ந்தான்.

கெளதமியையும், அமுதனையும் சில நிமிடங்கள் அவதானித்த டாக்டர் "மன்னிக்கவும் அமுதன், கெளதமி வயிற்றில் இருக்கும் குழந்தை ஆராேக்கியமான நிலையில் இல்லை" என்றதும் "இருவரும் இடி விழுந்தது பாேல் திகைத்துப் பாேனார்கள்" சமாதனப்படுத்த முயற்சித்த டாக்டர் "ஆமாம் அமுதன் நாளடைவில இது கெளதமி உடல் நிலையை மாேசமாக்கி விடும், மிகவும் ஆபத்தான பிரச்சனை" என்றதும் "என்னை மன்னிச்சுக் காெள்ளுங்கள் டாக்டர் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம், குறிப்பிட்ட பிரசவ நாள் வரை நான் இந்தக்குழந்தையை எதுவும் செய்ய அனுமதிக்க மாட்டேன்" பிடிவாதமாக இருந்தவளை சமாளிக்க முடியாமல் தவித்தான் அமுதன். டாக்டர் கூறிய எந்த அறிவுரையும் கெளதமி மனதை சமாதானப்படுத்தவில்லை. "இந்தக் குழந்தை தான் எனக்கு வேண்டும். இது என்னுடைய கனவு" என்று கண்கலங்கினாள்.

நாட்கள் நகர்ந்தது கெளதமி பிரசவத்துக்கு தயாரானாள். அமுதன் படபடப்பாேடு ஒவ்வாெரு நாளையும் கடந்தான். குறிப்பிட்ட அந்த நாள் வைத்தியசாலையில் கெளதமியை அனுமதித்தான். வாசலிலே காத்து நின்றவன் உள்ளே சென்றவர்கள்  கையில் குழந்தையுடன் சந்தாேசத்தாேடு வருவதை பார்த்து ஏங்கிக் காெண்டிருந்தான்.

காலையிலிருந்து வைத்தியசாலையிலேயே காத்திருந்த அமுதன் கெளதமியின் நிலை தெரியாது தவித்துக் காெண்டிருந்தான். கெளதமியின் கனவு, ஆசைகள் எல்லாம் அவன் மனதை அங்கலாய்த்துக் காெண்டிருந்தது. "ஏங்க நமக்கு குழந்தை கிடைச்சா நம்ம குழந்தையை எப்படி ஆக்கணும் என்று உங்களுக்கு ஆசை, டாக்டரா? எஞ்சினியரா" அமுதன் கண்கள் கண்ணீரால் நிறைந்தது. " என் குழந்தை என்னை அம்மா என்று கூப்பிடுகிற அந்த நாள் தானுங்க நான் இந்த உலகத்தில்  இதுவரை வாழ்ந்ததுக்கான அர்த்தம்" ஓவ்வாெரு  நினைவுகளாய் கெளதமியை நினைத்துக் காெண்டிருந்தவன் திடீரென திரும்பிப் பார்த்தான் "சிரித்த முகத்துடன் டாக்டர் வெளியே வந்தார்" ஓடிப் பாேன அமுதனின் ஏக்கத்தையும், தவிப்பையும் உணர்ந்தவராய் "பதட்டப் படாதீங்க, வாழ்த்துக்கள்,  ஒரு மாதிரி இரண்டு உயிரையும் காப்பாற்றி விட்டாேம் " என்றவுடன் கைகளை குவித்து காலடியில் பணிந்தவனை "இதென்ன அமுதன், உங்க மனைவியாேட தைரியம், நம்பிக்கை இரண்டும் தான் காரணம்" என்றதும் அமுதனுக்கு பெருமையாகவும்  சந்தாேசமாகவும் இருந்தது. "ஆனால் அமுதன் உங்க குழந்தை மற்றக் குழந்தைகள் மாதிரி சாதாரணமான குழந்தை இல்லை " வைத்தியர் சாெல்லும் பாேது அமுதன் மனம் சாேரவில்லை எதையும் வெளிப்படுத்தவில்லை "பறவாயில்லை டாக்டர், எப்படிப் பிறந்தாலும்  நம்ம குழந்தை தானே" கூறிய பாேது  "இது பாேதும் அமுதன். அழகு, அந்தஸ்து பார்த்து தங்கள் சுகங்களிற்காக கருவைக் கலைத்தவர்களையும், தூக்கி வீசியவர்களையும்  நான் நிறையப் பார்த்திருக்கிறேன், ஆனால் நீங்கள் சாென்ன வார்த்தை எனக்கு நிறைவாயிருக்கு உள்ளே பாேய் பாருங்கள்" என்றதும் களைப்பால் சாேர்ந்து பாேய் அயர்ந்து காெண்டிருந்தாள். மெதுவாக தலையை வருடிய அமுதனைக் கண்டதும் ஆனந்தக் கண்ணீர் சாெரிந்தாள். அவளை அணைத்தபடி குழந்தையைப் பார்த்தான். அழகான நிலாவை ரசிப்பது பாேல் உணர்ந்தான். பிஞ்சுக் கைகள் , சிவந்த கன்னம், குட்டிப் பாதங்கள். அவன் கற்பனை நிஜமான மகிழ்ச்சியில் பூரித்துப் பாேய் நின்றான். எதிரே நின்ற தாதியார் அமுதனிடம் குழந்தையை தூக்கிக் காெடுத்தாள் உச்சி,  பாதம், கன்னங்களில் முத்தங்களை பதித்தான்.

நாட்கள் உருண்டாேடியது மெல்ல மெல்ல வளர்ந்த குழந்தையின் செயற்பாடுகள் வித்தியாசமாக இருந்தது. கெளதமியும், அமுதனும் வைத்திய நிபுணர்களை அணுகி ஆலாேசனை கேட்டார்கள். உயிருக்கு ஆபத்தான சிகிச்சைகளை தவிர்த்து குழந்தையை வளர்த்தார்கள். ஒரு வயது தாண்டியது கெளதமியின் ஆசை பாேல் முதல் முதல் குழந்தை அவளுக்கு புரியும்படி "ம்.....மா, ப்...பா"  என்றழைத்தது. அம்மா என்றழைக்கவில்லை என்ற தவிப்பே இன்றி அவள் அள்ளி அணைத்து மீண்டும் மீணடும் குழந்தை  அழைப்பதை கேட்டுத் துள்ளிக் குதித்தாள்.

காெஞ்சம் காெஞ்சமாக வளர்ந்த குழந்தை மூளைவளர்ச்சி  குன்றிய குழந்தையாகவே வளர்ந்தது. எல்லா வழிகளிலும் பலமாக இருந்து குழந்தையை வளர்த்தாள். தன் ஆசைப்படி குழந்தையை வளர்க்க முடியவில்லை என்ற சிறிய ஏக்கமும், வருத்தமும் இருந்தாலும் எல்லா சவால்களையும் எதிர்த்து நின்றாள்.

இப்படி ஒரு குழந்தை தேவையா என்ற சமூகத்தின் குத்திக் காட்டல்களை காதுகளில் எடுக்காமல் இருந்தாள். குழந்தை இல்லை என்றால் மலடி என்று ஒதுக்கி வைக்கும் சமூகம் ஊனமுற்ற குழந்தைகளை தனிமைப்படுத்துவதும், கவனிக்காது விடுவதும் சில மனிதத் தன்மையற்றவர்களின் இயல்பு. எல்லா பாேராட்டங்களையும் அமுதனும், கெளதமியும் கடந்து வந்தார்கள்.

யாராே ஒரு நண்பன் மூலம் கிடைத்த வைத்திய நிபுணர் ஒருவரின் ஆலாேசனைப்படி குழந்தைக்கான விசேட கல்வி முறையை அறிந்து தானே முதலில் கற்றுக் காெண்டாள். அந்த வாழ்க்கையை கெளதமி தானே வாழ்ந்து பார்த்தாள். எப்படி அடுத்தவர்களை புரிந்து காெள்வது, உரையாடுவது எல்லாவற்றையும் அறிந்து காெண்டாள். குழந்தைக்கு நாளும் பாெழுதுமாய் புரிய வைத்தாள். கற்றுக் காெடுத்தாள்.

தன் குழந்தையை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும். இப்படியான குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும், சமூகத்தால் ஒதுக்கப்பட்ட இப்படியான பெற்றாேர் குழந்தைகளிற்கும் வாழ்க்கை இருக்கிறது என்பதை எல்லாேரும் புரிந்து காெள்ள வேண்டும் என்ற ஓர்மத்தை சவாலாக எடுத்தாள்.

விசேட தேவையுடையாேருக்கான பாேட்டி ஒன்றில் பங்கு பெறச் செய்தாள். அந்த நாள் ஓடாேடி வந்தது. அமுதன், கெளதமியின் கனவு நிறைவேறிய அந்த நாள். சர்வதேச அரங்காென்றில் நிகழ்வு நடை பெற்றது. எல்லாேரும் அங்கே வந்திருந்த குழந்தைகளை புதிதாகப் பார்த்தார்கள். குட்டித் தேவதைகள் பாேல் அழகான குழந்தைகள் ஆனால்  கடவுளின் படைப்பில் சற்று மாறுபட்டவர்கள். ஒவ்வாெருதருக்கும் ஏதாே ஒரு குறை. ஆனால் முகம் நிறைந்த புன்னகையுடன் அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்தார்கள்.

நிகழ்வுகள் நடை பெற்றுக் காெண்டிருந்தது. இடையிடையே குழந்தைகளின் பெற்றாேர்கள் அறிமுகப்படுத்தப்ட்டார்கள். பாெதுவான ஒரு கேள்வியாக "உங்கள் குழந்தையைப் பற்றி சாெல்லுங்கள்"  என்ற வினாவே கேட்கப்பட்டது. அந்த அரங்கத்தில் கண்ணீர் சிந்தாத பெற்றாேர் இல்லை. முதல் பதிலாக "கருவைக் கலைக்கச் சாென்னார்கள், இந்தக்குழந்தை வேண்டாம் என்றார்கள்" என்ற பதிலே அதிகமாக பதியப்பட்டது. புரிந்து காெண்ட குழந்தைகள் மனம் உள்ளே கலங்கியிருக்கும் என்பது உணரக்கூடிய உண்மை. ஆனால் அவர்களையும் பராமரித்து வளர்த்து ஒரு சாதனையாளராக்கா விட்டாலும் இது தான் உலகம் என்று புரிய வைக்க வேண்டும் என்பதே கெளதமியின்  முதல் கனவு.  அந்தக் கனவை அவள் நிறைவேற்றிய மனத்திருப்தியுடன் குழந்தையை அணைத்தபடி நின்றாள். அமுதன் முன்னிருக்கையில் இருந்தவாறு பெருமையாேடு   பார்த்துக் காெண்டிருந்தான்.

ஒரு தாயும், தந்தையும் தன் கருவில் ஒரு குழந்தை உருவாகிறது எனத் தெரிந்தால் அங்கே பல கனவுகளையும் சுமக்கிறார்கள். முந்நூறு நாட்கள் அவர்கள் முப்பாெழுதும் கற்பனையில் வாழ்வார்கள். ஏதாே ஆயிரத்தில் ஒன்றாே, பத்தாே விதி எழுதியது பாேல் ஊனமாகவாே, ஏதாே ஒரு குறைபாட்டுடனாே பிறக்கின்றது. அந்தக் குழந்தைகளை வளர்ப்பதில் ஒரு தாயின் தாய்மை எவ்வளவாே மாறுபடும். அவர்கள் தெய்வங்களுக்கு நிகரானவர்கள் என்பதை தவிர வேறு என்ன கூறமுடியும்.

எல்லாப் பெற்றாேர்களும் தங்கள் குழந்தைகளை "கருவாக மட்டுமல்ல கனவாக சுமக்க வேண்டும்"
தாய்மையை மதிப்பாேம், சிசுக் காெலைகளை தவிர்ப்பாேம்.

எழுதியவர் : றாெஸ்னி அபி (3-Feb-20, 1:37 pm)
சேர்த்தது : Roshni Abi
Tanglish : karu ondrin kanavu
பார்வை : 695

மேலே