நீளும் இரவின் காலம்
உரக்க பேசிய
உண்மைகள் எல்லாம்
காலமாற்றத்தால் இன்று
திரும்பிப்பார்த்து நகைத்திட
வந்த கோபத்தில்
பறித்துப்போட்ட பூக்கள்
எல்லாம் என் ஆற்றாமையை
எண்ணி பரிகாசித்திட
தண்ணீருக்குள் ஏறிந்த
கற்கள் எல்லாம்
நீர்குமிழியாய்
சுவாசித்துக்கொண்டிருக்க
எட்டிப்பார்த்தேன் ஏதும்
அறியாத குழந்தையாய்
காலம் தூளியில்
துயில் கொண்டிருக்க
தாலாட்டுப்பாடியே என்
வலியையும் சோகத்தையும்
மறைந்திட மறந்திட
வார்த்தைகள் கிடைக்காமல்
பாடத்தொடங்கினேன்
மௌனமாய்.......