கனவுகள்
கனவுகள்
முக்காலத்து நிகழ்வுகளாய்..
நிறைவேறா ஆசைகளாய்...
முன்பின் முரணாய்
விரிந்து நிற்கும் கனவுகளுக்குள்
புதைந்து போகிறது தூக்கம்!
அச்சுறுத்தலாய்
படபடக்க வைப்பதுவுமாய்
வரும் கனவுகளால்
சிதைந்து போகிறது தூக்கம்!
களைப்பு நீங்க உறங்கிய
உறக்கத்தில் உலைக்க வந்த
பலவித குழப்பகனவுகளால்
பதைத்து போகிறது தூக்கம்!
கனவுகள் ஒழிந்த தூக்கம்
என்று கண்கள் வந்து ஏகுமோ?!கனவுகள் கழிந்த தூக்கமே
கனவாகித்தான் போகுமோ!