குடியரசு
குடியரசு
நாட்டுமக்கள் அனைவருமே அரசின்
அங்கம் என்று நினைப்போம்!
நோட்டிற்காக வோட்டை விற்கும்
மனப்பான்மையை அழிப்போம்!
நாட்டிற்காக உழைப்பவரை
ஆட்சி செய்ய அழைப்போம்!
போட்டி போட்டு அனைவருமே
அயராது உழைப்போம்!
நாட்டிலுள்ள வறுமையை
முற்றிலுமாய் ஒழிப்போம்!
நாட்டின் குற்றம் குறை களைந்து
வளங்கொழித்து செழிப்போம்!
மேல்நாடும் போற்ற வளர்ந்து
பண்பாட்டை காத்து நிலைப்போம்!