காதல் சலிக்குதடி


உன் கண்களின் மொழிக்கு

காதல் என்னும் பேர் வைத்தேன்

கவிதையால் பதில் உரைத்தேன்

கண்ணசையாமல் பார்த்திருந்தேன்

உன் அழகு மயக்க வில்லை

உன் பேச்சில் மயங்கவில்லை

உன் நடை உடையில் மயங்கவில்லை

கண்ணசைவில் மயங்கி விட்டேன்

என் உயிரை தொலைத்து விட்டேன்

தினமும் தேடிவிட்டேன்

இன்னும் கிடைக்க வில்லை

எங்கும் காணவில்லை

எங்கு ஒளித்து வைத்தாய்

தினமும் வலிக்குதடி

காதல் சலிக்குதடி

எழுதியவர் : rudhran (2-Aug-10, 12:29 pm)
பார்வை : 545

மேலே