மனமொழி

மன மொழி

உன்மேல் உள்ள அன்பை
உவந்து சொல்ல வந்தேன்!

கன்னல் தமிழ் சொற்கள்
முனைந்து தேடி நலிந்தேன்!

மனதின் மொழி மௌனம்
நினைந்து நானும் உணர்ந்தேன்!

மௌனம் உணர்த்தா அன்பை
மொழியா உணர்த்தும் தெளிந்தேன்!

எழுதியவர் : Usharanikannabiran (1-Feb-20, 4:07 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 90

மேலே