ஆறுதலை உண்டு
'சிவன், முருகன், பிள்ளையார், திருமால், சிவனடியார் இவர்களுக்குத் தனித்தனியே ஆறுதலை உண்டென்று சொற்சுவை விளங்க ஒரு வெண்பாவில் அமைத்துப்பாடுக” என்றார் ஒரு புலவர்.
நேரிசை வெண்பா
சங்கரற்கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை
ஐங்கரற்கு மாறுதலை யானதோ - சங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை பித்தாநின் பாதம்
படித்தோர்க்கு மாறுதலை பார். 16
- கவி காளமேகம்
பொருளுரை:
சிவபெருமானுக்குத் தலையிலே கங்கையென்னும் ஆறு உரியதாகும், முருகப் பெருமானுக்கும் ஆறு தலைகள் உளவாகும், ஐங்கரனாகிய பிள்ளையாருக்கு உடலோடு மாறு கொண்ட யானைத் தலையாய விளங்கும், சங்கத்தை ஏந்தியவரான திருமாலுக்கும் பிரளய வெள்ளம் உறைவிடமாயிருக்கும், பித்தனாகிய பரமனே! நின் திருவடிகளைப் போற்றியவரான என்போலும் சிவனடியார்க்கும் ஆறுதல் உண்டாகி யிருக்கின்றது. இதனைக் காண்பாயாக என்கிறார் கவி காளமேகம்.
சிவபெருமானின் கருணை தனக்கு இருப்பதனால் தம்மை அவர்களால் வெற்றிக்கொள்ள இயலாது எனவும் குறிப்பாக எச்சரிக்கின்றனர்.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
