எட்டாவது ஸ்வரம்
ஆரம்பப் புள்ளி
மூன்று முடிச்சு...
அது தொட்டு
ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் அதிகமாச்சு...
அன்புதான் கோம்ஸ்... ராம்ஸ்...
இவர்களின் மூச்சு...
ஒவ்வொரு இதயமும்
இன்னொரு இதயத்தின்
இனிக்கும் புத்தகம் ஆச்சு...
ஊரெல்லாம் நல்ல தம்பதி
இவர்களெனப் பேச்சு...
தனக்கென்று வாழ்வது கொஞ்சம்...
துணைக்கென்று வாழும் நெஞ்சம்...
மகிழ்ச்சிக்கேது இவர்களுக்கு பஞ்சம்...
கோம்ஸ்... ராம்ஸ்...
அன்றைய மணமக்களே...
இன்று திருமணநாள் கொண்டாடும்
இனிய தமிழ் மக்களே...
நீங்கள் என்றும் மேன்மக்களே...
தாமே தம் பெயரில்
அழகிய ஓவியமாய் எழுதும்
அர்த்தமுள்ள காவியம் ஒன்றின்
பெயர்... ராம்ஸ்... கோம்ஸ்...
ஏழு ஸ்வரங்களில்
இன்னொரு ராகம்
ஒன்று இசைத்திருக்க
என்றும் நீங்கள் இசைந்திருக்க
ராம்ஸ்... கோம்ஸ்...
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்..
😀👍👏💐🌹🙏🎂🧁
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
