தோழிக்காக ஒரு கவிதை பகுதி - 5



நானும் தோழியும் பேசாமல் மௌனமாய்

ஒரு இடத்தில உலகமே ஊமையாய்

ஆனது போல் ஒரு பிரம்மை

அவள் என்னிடம் பேசாத போது

ஊமைக்கு பேசும் வரம் அளித்தது போல்

அவள் தொடங்கினாள் ஊருக்கு சென்றாலும்

அங்கும் உன் நினைவு சிறகு ஒடிந்தது போல்

எனக்குள் ஒரு உணர்வு திரும்பி வரும் நாள்

எனக்குள் ஒரு மகிழிச்சி நொடியில்

நடந்தவைதான் என்றாலும் இனம் புரியா

சுகம் உணர்ந்தேன் என்றாள் உனக்கும்

வலித்திருக்கும் என்று நானறிவேன்

இருந்தும் நீ சொல்ல நான் கேட்க ஆசை

என்றாள்

இறக்காமல் நான் உணர்ந்தேன் நரகத்தின்

நிமிடங்களை கடைசி நொடி உயிர்த்து வந்தேன்

நீ வரும் செய்தி கேட்டு துளிர்த்து நின்றேன்

பிறந்த செய் அழைக்க அம்மா அடையும் சுகம்

பருவ வயதில் நான் அடைய எனக்கும் ஒரு

வாய்ப்பு

உன் பிரிவு என்று சொல்லி முடிக்க

உனக்கென நான் பெரிதாய் ஒன்றும்

செய்ததில்லை

என்மேல் ஏன் உனக்கு எத்தனை பாசம் என்றாள்

காரணம் தெரியாமல் வருவது காதல்

கண்ணீரில் கனம்தனை தாங்குவதுதான் நட்பு

என் கண்ணீரின் கணமெல்லாம் தாங்கியவள்

நீதானே அதனால் உன்மேல் பாசம் அதிகம்

என்றேன்

வரைமுறை என்பது நட்புக்கு என்றுமில்லை

சிறகுகள் விரிந்துவிட்டால் வானம் இல்லை

எல்லை

நம் நட்பும் அதுபோல்தான் பிரிவை தாங்கும்

சக்தி நமக்கு ஏன் இல்லை என்ற கேள்வி

மட்டும்

எனக்குள் அடிகடி எழுகிறதே என்றாள்

உனக்கு மட்டும் அல்ல உண்மை நட்புடன்

பழகும் எல்லா நண்பருக்கும் இதே கேள்வி

எழும்

விடை இல்லா மௌனம் பெறும்

நம் நட்பு பிரியாதிருந்தால் அது போதும்

என்றேன்

மாலை இருட்டியதும் விடை பெற்றோம்

நாளை சந்திப்போம் காலத்திருக்கு இடம்

விட்டோம்



இன்னும் தொடரும் தோழிக்காக ஒரு கவிதை

எழுதியவர் : rudhran (13-Sep-11, 7:27 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 604

மேலே