இறைவா எமக்கு வலிமை கொடு
இறைவா எனக்கு வலிமை கொடு......
இறைவா! இதுவே யான் உனை வேண்டுவது.....
ஆத்மயிருளை வேரொடு தகர்த்திட
அகத்தில் எமக்கு வலிமை கொடு!
இன்பம் துன்பங்களை இலகுவாய் இணையாய்
தாங்கிட எமக்கு வலிமை கொடு!
ஆக்கம் ஈந்துடும் அரும் சேவைகளில்
ஆட்பட எமக்கு வலிமை கொடு!
ஏழ்மை கண்டு எள்ளாமலும்
ஏமாப்பிற்கு அடிவணங்காமலும்
என்றும் எமக்கு வலிமை கொடு!
அன்றாட அற்பக்கருமங்களில் ஆட்படாதுமனம்
ஏர்ப்படைய எமக்கு வலிமை கொடு!
இறைமையின் சித்தத்திற்கு முழுதாய் எமை ஒப்புவிக்க
ஆத்ம வலிமையை எமக்குக் கொடு!
“This is my prayer to thee my lord “ என்ற இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் பாடலின் மொழிபெயர்ப்பு .