அடித்தளமாய்

மணலில் வீடு கட்டியேதான்
மனம்போ லாடிய காலமெல்லாம்
மணல்போல் மறைந்தே போயினவே
மனதில் நினைவை விட்டுவிட்டே,
கணமிதில் பிள்ளைகள் ஆடட்டும்
களிப்பை நெஞ்சில் சேர்க்கட்டும்,
பிணக்குடன் அவரைத் தடுக்காதே
பிறகவர் உயர்வுக் கடித்தளமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Feb-20, 7:25 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 61

மேலே