அன்பே
உன் கோபத்தின் கனலில்
குளிர்காய்கிறேன்
பேரன்பின் வேருடன் கிளைபரப்பும்
கோபத்தில்
உன் பூமுகம் மேலும் சிவக்கிறது
தொடர்ச்சியான நிராகரிப்பில்
மௌனமான என்னுடன்
பேசாமல் போனதாய் வருத்தம்கொள்கிறாய்
முரண்பாடுகளின் ஓவியமாய்
மேலும் மேலும் அழகாகிறாய்..
உனைவிடுத்த சிந்தனையில்
நிமிடங்கள்கூட கழிவதில்லை
என்பதனை நீ
உணரவேயில்லையா...
Rafiq