ரகசியம்

நான் போடும் கோலம் உனக்கான
செய்தி என்பது
நமக்கு மட்டும் தெறிந்த ரகசியம்
ஒரு நாள் அம்மா போட்ட கோலத்தை
பார்த்து
நீ என்னிடம் வந்து அதன் அர்த்தம்
கேட்க
அது எங்க அப்பாவதான் கேட்கனும்னு
சொன்னதும்
அசடு வழிய நீ நின்றது நினைவில் நிழலாட
உனக்கான செய்தியை சொல்லிட்டு
உட்கார்ந்து ரசிப்பேன்