திருமண நாள்

உனது பயணம் இனிதாகட்டும்
இதயம் இணைந்து
ஆனது ஆண்டுகள் சில
கரம்கோர்த்த இந்நாளில் திரும்பிப்பார்த்தால்
கடந்தபாதையெல்லாம்
ஏதேதோ சுவடுகள்..
இணைந்தே இருந்தோம் ஒவ்வொரு நொடியும்
உனது பெருங்கனவின்பலனாய்
இணைந்தனர் இருமலர்கள்..
தூவான மாலைநேரமாய்
மலர்களுடன் நாம்கழிக்கும் நிமிடங்களெல்லாம் இனித்துக்கிடக்கிறது..
இனிமையின் நிரந்தரமாய் தங்கிவிட்ட மலர்கள்
எப்போதும் உன்மடியினில்..
இனிவரும் காலமும் மகிழ்ந்திருப்போம்..
நம்முடன் அந்த சுவனப்பறவைகள்
வழித்துணையாய் வரட்டும்

எழுதியவர் : Rafiq (6-Feb-20, 10:23 am)
சேர்த்தது : Rafiq
Tanglish : thirumana naal
பார்வை : 130

மேலே