சிறுநீரின் உறுப்பால் உமிழ

விதைக்குள் பல வேர்களை வைத்து
வீரியமான பெரிய மரத்தை வைத்து
வெவ்வேறான அளவில் கிளையை வைத்து
அவ்விதையையே பழத்தில் படைத்த
வித்தகனே இவ்வுலகத்தின் வேந்தனாவான்

எவ்வளவு மழை பொழியினும்
எவ்வகை இயற்கை சீற்றம் வந்திடினும்
எக்கொடிய வியாதி பீடிப்பினும்
எப்பெரிய செயற்கை அழிவு உருவாயினும்
எவற்றையும் காக்கும் பூமியைப் படைத்தவனே பகவன்

நீரினுடே உயிரைப் படைத்து
சிறுநீரின் உறுப்பால் உமிழ வைத்து
நாறும் உறுப்பில் புகுத்தவிட்டு
நாளும் பொழுதும் பெருக்க வைத்து
நன்றாய் ஒருநாள் பிறக்கச்செய்பவனே மூலம்
- - - - - -நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (6-Feb-20, 7:10 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 77

மேலே