விடியலை தேடி
பொய்யான உலகம்..
கசப்பான வார்த்தைகள்..
குரோதம் கொண்ட இதயங்கள்..
முகமூடி அனிந்த முகங்கள்- இதன்
நடுவே எனது பயணம்..
அநீதி செய்யும் குணங்கள் ..
தாழ்த்தி பார்க்கும் பார்வைகள்..
நன்றினை மறக்கும் உள்ளங்கள்
நிறம் மாறும் மனிதர்கள்- இதன்
நடுவே எனது வாழ்க்கை..
ஏமார்ந்த கண்கள்..
மெளனமான இதழ்கள்..
சோர்வடைந்த பாதம்..
உதிர்ந்து போன இதயம்- இதன்
உள்ளே எனது பிண்டம்...
அழுதேன்..அழுதேன்..கண்களில்
கண்ணீர் தீரும் வரை.. அழுதேன்..
இதனை கவனித்துக் கொண்டிருந்த
என் ஆழ்மனம் கூறியது..
நண்பனே..
இது மாயை உலகம் - இதனை
காகிதம் ஆளும்..ஒருவன்
கண்ணியம் பெற்றால்- இங்கு
தனித்து தான் நிற்பான்..
கழுகாய் வேண்டாம்
பறந்தால் போதும்...
கிடைத்தது அதிகம்..
என்று நீ நினைத்தால்..
பொறாமை மாய்ந்து
புதிதாய் வாழ்வாய்..
மாயத்தில் வாழும்
இம் மூடர்களை விட்டு
உன்னுள் விடிந்த
புது விடியலை தேடு..