தீப்பொறி 🔥
தீப்பொறி 🔥
எங்கோ ஒரு இடத்தில்
யாரோ ஒருவரால்
ஏதோ ஒரு தருணத்தில்
தன் வாழ்க்கை என்னும் பயணத்தில் அவமானப்படும் மனிதன்
சுயமறியாதை இழக்கிறான்
வெட்கி தலைகுனிகிறான்
கண்ணீர் விட்டு அழுகிறான்.
காயப்பட்ட உள்ளத்தை
வைராக்கியம் கொண்டு
வைத்தியம் செய்கிறான்.
வறுமையை திறமையால் வெல்ல முடிவெடுக்கிறான்.
அந்த புள்ளியில் புறப்பட்ட தீப்பொறி, தீபிழம்பாக மாறி.
காட்டுதீயாக அவன் அறிவு ஜோதி கொழத்து விட்டு எரித்து எங்கும் பரவ
திறமை விஸ்வரூபம் எடுக்க
அடமானம் வைக்கப்பட்ட
தன்மானத்தையும், சுயமரியாதையையும்
மீட்டெடுக்கிறான் அடக்கி ஆண்ட அதிகாரத்தை தலைகுனிய செய்கிறான்.
அந்த தருணம் தான் அவன் காத்திருந்த
அந்த தருணம் தான் அவன் வெற்றியாக கருதப்படுகிறான். உண்மையான மகிழ்ச்சியாகவும் கருதப்படுகிறான்.
- பாலு