இயற்கையும் மனிதனும்

வானம்
நீல வண்ணத்திலும்
சிவப்பு வண்ணத்திலும்
கருமை நிறத்திலும்

பூமி
மலைகளும்
பாலைவனங்களும்
சதுப்பு நிலங்களும்
ஓடைகளும்
பள்ளங்களும் குழிகளும்

காற்று
தென்றல்
புயல்
வெப்பக்காற்று
பனிக்காற்று

தீ
திடமாக
திரவமாக
வாயுவாக
விளக்கேற்ற
அடுப்பெரிக்க
சுட்டெரிக்க

நீர்
உப்பு நீராக
தப்பு நீராக
அடங்கி அடங்கா நீராக
ஆக்கி அழிக்கும் நீராக
ஓடி உறைந்து ஆவியாகிறது

மனிதன்
வானமாக - அறம்
பூமியாக - பொருமை
நீராக - கண்ணீர்
தீயாக - கோபம்
காற்றாக - வாழ்ந்து மறைவு...

கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (8-Feb-20, 10:27 am)
பார்வை : 320

மேலே