விஷ்ணு

மஹா விஷ்ணு பரமபுருஷன் அவன்
ரூபங்கள் வெண்சங்கு சக்கரம் மற்றும்
கதை வில்லென்ற இவைகள் அனைத்தும்
பார்க்கக்கடலில் யோக நித்திரையில் அவன்
சயனிக்கின்றான் என்று மெய்ஞானிகள் அறிந்தே
கூறுவார் , பரம புருஷன் அவன்
அவனில் பெண்ணுருவம் இலக்குமி அவன்
இதயத்தில் என்றுமே இணைபிரியாது அமர்ந்தவள்
விஷ்ணுதான் நாம் போற்றும் திருமால்
தன்நின்று ஒன்றுமில்லா நிலையிலிருந்து
ஒவ்வொன்றாய் உருவாக்குபவன் உருவாக்கி காத்து
காத்தபின் அழித்தும் மீண்டும் உருவாக்குபவன்
உருவாக்கும்போது பிரமன் காக்கையில் மால்
அளிக்கையில் சிவனாய் எல்லாம் அவனே
என்கிறது பாகவத புராணம் ...
மாலவன் எல்லாமாய் இருந்தும் இல்லாதவன்போல்
இருக்கின்றான் அதனால் அவன் மாமாயோன்
நிறம் வாசம் ஒளி ஒலி நீர் நெருப்பு இவற்றிற்கு
எல்லாம் அப்பாற்பட்டவன் அவன் ......
தான் கார்முகிலாய் இருந்து தனக்கு
மூத்தோனாய் வெண்சங்கொத்த நிறத்தான்
பலராமனாய் அதற்குமுன் தன் ஆயிரம் ஆவிற்கு
வெண்ணிறம் தந்து இலக்குமணனாய் திகழ்ந்தான்

உருவும் அவனே அறிவும் அவனே
விசும்பும் அவனே நீர் நெருப்பு ஆகிய
பஞ்ச பூதங்கள் அவனே கோடி சூரிய
ப்ரகாசனும் அவனே காரிருளும் அவனே

எதிலும் வியாபித்த பரம்பொருள் அதனால்
அவன் மாலவன் விஷ்ணு

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (7-Feb-20, 11:18 am)
Tanglish : vishnu
பார்வை : 219

மேலே