காதல் பாடம்

புன்னகிக்க தெரியாத பூக்களே..
என்னவளிடம் கற்றுக்கொள்ளுங்கள்
எப்படி புன்னகிப்பதென்று..

நடையிடத் தெரியாத அன்னங்களே..
என்னவளிடம் பழகிக் கொள்ளுங்கள்
எப்படி நடையிடுவதென்று..

அலை புரளத்தெரியாத கடல்களே..
என்னவள் கூந்தலிடம் தெரிந்த கொள்ளுங்கள்...- எப்படி
அலை புரள்வதென்று..

நீந்தத் தெரியாத மீன்களே
என்னவள் கண்களிடம்
கற்றுக்கொள்ளுங்கள்...
எப்படி நீந்துவதென்று

அழத்தொரியாத கண்களே..
என்னவளால் என்னிடம்
தெரித்துக் கொள்ளுங்கள்
எப்படி அழுவதென்று..

எழுதியவர் : பஜூலுதீன் யூசுப் அலி (7-Feb-20, 11:21 am)
Tanglish : paadam
பார்வை : 74

மேலே