நீ சொன்னால்

இனியவளே..
நீ பருகச் சொன்னால்
கொடி விஷத்தினையும்- கனி
ரசமென பருகுவேன்..
நீ தீண்டச் சொன்னால்
செந்தீயினையும் - புதுத்
தென்றலாய் அரவணைப்பேன்..
நீ பாதமிடச் சொன்னால்
முள் பாதையினையும் - பூப்
பாதையென பாதமிடுவேன்..
இனியவளே..
நீ மறக்கச் சொன்னால்
இவ் உயிரினையும்..- நீ
நினைப்பாய் என
மாய்த்துக் கொள்வேன்....

எழுதியவர் : பஜூலுதீன் யூசுப் அலி (7-Feb-20, 11:24 am)
Tanglish : nee sonnaal
பார்வை : 183

மேலே