பல்கலைக்கழகம்💺

பட்டினிக் கனவுக்கு
பட்டம் ஒன்று பண்டமாகும்
என்று படையெடுத்து செல்லுகிறோம்...

பல்கலைக்கழகம் பல
கதை சொல்ல சிறுகதைகளின்
கதாநாயகர்களாக வளம்வருகிறோம்...

உணர்வுகளின் இதழ்கள்
விரிக்கப்பட்டு அதில்
பல சுவைகள் கொட்டப்பட்ட
அச்சாறாகிறோம்...

பாடத்திட்டத்திற்குள் அடைக்கப்பட்டு
பட்டதாரியாக குஞ்சு
வெளிவரும் வரை
படாதபாடு படுகிறோம்...

அதிலும்....
"வேகமாக புரட்டப்படும்
காகிதம் போல சில மாணவர்கள்...
"பரவச தேகத்தை பதியம் போடும்
சில மாணவர்கள்....
"படிப்படியாக பழம் காய்க்கும்
சில மாணவர்கள்(இஷான்)

எழுதியவர் : இஷான் (12-Feb-20, 2:16 pm)
சேர்த்தது : இஷான்
பார்வை : 78

மேலே