ரம்மி குறியீடு
ரம்மி விளையாடி -
ரம்மியமான வாழ்க்கையும்
ரம்மியமற்று போகுது - அந்த
ரம்மி இணையதள விளம்பரத்தில் -
ரம்மியமாய் வந்து -
ரம்மியமாய் ஆசைக்காட்டி -
ரம்மியமாய் இழுக்கும் -எமதர்மனின்
ரம்மிய தோற்றமே -
ரம்மியில் தோற்றவர் - செல்லுமிடத்தை-
ரம்மியமாய் எடுத்துரைக்கும் குறயீடாகிறது...!!!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி