ஒரு கண் வேறு மறு கண் வேறு👀
பாம்பு பாதைக்கு
ஊர்ந்து செல்லும்
குருட்டு சுவடுகள்
ஊரை அடையுமா?
கன்னி வானம் போர்த்தி
கைய்யில் ஒளிக்கீறல் காட்டி
இரவோடு இரவலனாக முடியுமா?
இது அது அது இது
என்ற கோட்பாட்டு திறவுகோல்
கோளாறான விலங்கிற்கும்
தொடுதல் காட்டுமா?
கழுத்து நீட்டும் வாழ்க்கைக்கு
காகித எழுத்துக்களின் பானம்
மட்டுமே தாகம் தீர்க்குமா?
மேடைக்கு வா
அங்கே நின்று
மேளம் கொட்டியது போதும்
இசையின் சார்பு காண....(இஷான்